Wednesday, 21 March 2018

உயர் இரத்த அழுத்தம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான

உயர் இரத்த அழுத்தம் இருந்தும் அதை உணராத மக்களின் எண்ணிக்கை, கணிசமானது. ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கான நடவடிக்கைகளுக்குத் தேவைப்படுவது, உயர் இரத்த அழுத்தத்தின் பின்விளைவுகளை குறைப்பதும் மற்றும் உயர் இரத்த அழுத்த எதிர்ப்பிகள் மருந்து சிகிச்சைமுறையை இயன்ற அளவு குறைப்பதும் ஆகும். மருந்து சிகிச்சைமுறையை தொடங்குவதற்கு முன், குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகிறது உயர் இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான 2002 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய உயர் இரத்த அழுத்த கல்வி திட்டத்தின் மூலம் கோடிட்டு காட்டிய வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாக இருக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களை தொடர்ந்து 2004 பிரிட்டிஷ் உயர் இரத்த அழுத்த அமைப்பின் முன்மொழியப்பட்ட வழிகாட்டல்கள் பின்வருவன:
  • இயல்பான உடல் எடையை பராமரித்தல் (எ.கா., உடல் நிறை குறியீட்டெண் 20–25;).  கிலோ/மீ 2).
  • உணவுத்திட்ட சோடியம் உட்கொள்ளுதலை நாளொன்றுக்கு 100 mmol-ஆக குறைத்தல் (நாளொன்றுக்கு <6 கிராம் சோடியம் குளோரைட் அல்லது <2.4 கிராம் சோடியம்).
  • சுறுசுறுப்பான நடைபயிற்சி போன்ற வழக்கமான உடல்ரீதியான ஏரோபிக் நடவடிக்கையில் ஈடுபடுதல் (வாரத்தில் பெரும்பாலான நாட்கள், நாளொன்றுக்கு ≥30 நிமிடம்).
  • ஆண்களுக்கு / நாளொன்றுக்கு 3 யூனிட்களுக்கு மேல் மற்றும் பெண்களுக்கு / நாளொன்றுக்கு 2 யூனிட்ககளுக்கு மேல் மது அருந்துவதை கட்டுப்படுத்துதல்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஒரு உணவுக்கட்டுப்பாட்டை உட்கொள்ளுதல் (எ.கா., நாளொன்றுக்கு குறைந்தது ஐந்து பகுதிகள்).
ஆற்றல் வாய்ந்த வாழ்க்கைமுறை மாற்றியமைத்தல்கள் ஒரு தனிப்பட்ட உயர் இரத்த அழுத்த எதிர்ப்பிகள் மருந்தைப் போல் அதே அளவுக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாழ்க்கைமுறை மாற்றியமைத்தலின் கூட்டிணைப்பால் இன்னும் நல்ல முடிவுகளை அடைய முடியும்.

பேரிச்சை சத்துக்கள்


Image result for dates image

பேரிச்சை சத்துக்கள் தேவையான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும். முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.



Saturday, 17 March 2018

தலைவலி போக்க எளிய வழி முறைகள்

உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்து பாடாய் படுத்தி எடுக்கிறதா. தாங்க முடியாத வலியால் துளைத்து எடுக்கிறதா.
இதற்கு ஒரு சிறந்த மருந்து உங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றினாலே இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஒற்றைத் தலைவலிக்கு என்ன தான் மாத்திரைகள் எடுத்தாலும் இதற்கான பலன் கிடைப்பதில்லை.
.இந்த ஒற்றைத் தலைவலி உங்கள் தலையின் ஒரு பகுதியில் மட்டும் வலியை ஏற்படுத்தி துடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இது ஒரு நாளைக்கு 4 லிருந்து 72 மணி நேரம் வரை கூட நீடிக்கலாம்
இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்குமே வித்தியாசம் அடைந்து காணப்படுகிறது. 75% மக்களுக்கு ஒற்றைத் தலைவலி வர பரம்பரையும் காரணமாக உள்ளது.
எனவே இந்த ஒற்றைத் தலைவலிக்கு பக்க விளைவுகளை உண்டு பண்ணும் மாத்திரைகளை சாப்பிடுவதை விட
இயற்கையான பொருட்களை கொண்டே இதை சரி செய்து விடலாம்.
சரி வாங்க எந்த எந்த இயற்கை பொருட்கள் எப்படி இந்த ஒற்றைத் தலைவலியை போக்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
புதினா டீ :
தினமும் புதினா டீ பருகுவதால் இந்த ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம். இநது நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்து ஒற்றைத் தலைவலியை நன்றாக குறைத்து நல்ல பலனை கொடுக்கும்.
சிவப்பு மிளகாய்;
சிவப்பு மிளகாயில் கேப்சைசின் என்ற பொருள் உள்ளது. இந்த பொருள் ஒற்றைத் தலைவலியை சரி செய்கிறது. இந்த பொருள் நமது உடலில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர் மூலமாக வலியை குறைப்பதற்கான சிக்னலை அனுப்புகிறது.
இஞ்சி;
இஞ்சி கண்டிப்பாக ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துகிறது. ஒற்றைத் தலையில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் தென்படும். ஏனெனில் இந்த ஒற்றைத் தலைவலி நம் வயிற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒற்றைத் தலைவலிக்கு ஒரு மிகச்சிறந்த வீட்டு முறையாகும்.
ஐஸ் பேக்;
ஐஸ் பேக்கை வைத்து தலையில் ஒத்தடம் கொடுப்பதால் சூடான வலிக்கு குளிரான ஒத்தடம் ஒரு மர மரப்பான தன்மையை அந்த இடத்தில் ஏற்படுத்தி வலியின் வீரியத்தை குறைக்கிறது. இந்த ஒத்தடம் உங்கள் தசைகளையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது.
காஃபைன்;
ஒற்றைத் தலைவலி இருக்கும் போது ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற முறையில் காஃபைன் எடுத்தால் அதன் வலி குறைந்து விடும்.
மக்னீசியம் உணவுகள்;
மக்னீசிய சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுக்கும் போது ஒற்றைத் தலைவலி குணமாகிறது. இந்த முறை பெண்களின் மாதவிடாய் வலிகளையும் சரி செய்கிறது.
மக்னீசியம் அடங்கியுள்ள உணவுகளாவன கீரைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, சூரிய காந்தி இலைகள், வெள்ளை சோளம், ப்ரவுன் அரிசி, முழு தானியங்கள் ஆகியவை ஆகும்.
இருட்டு அறையில் அமர்தல்;
வெளிச்ச கூச்சத்தினால் அல்லது போட்டோ போஃபியா போன்றவற்றாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. எனவே அதற்கு எதிர் பதமாக ஒரு இருட்டு அறையில் ஓய்வு எடுத்தால் கொஞ்சம் ரிலீவ் உண்டாகும்.
விட்டமின் பி2 அடங்கிய உணவுகள்;
நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் ரிபோப்ளவின் (விட்டமின் பி2) எடுத்து கொள்ள வேண்டும். இதை 3 மாதங்கள் பின்பற்றினால்
நல்ல மாற்றத்தை காணலாம்.
நல்ல தூக்கம் ஒற்றைத் தலைவலி மேலும் நமது தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. எனவே நன்றாக தூங்கினாலே போதும் ஒற்றைத் தலைவலியை துரத்தி விடலாம்.
தலை மற்றும் கழுத்து பகுதி மசாஜ்;
அப்படியே உங்கள் தலை மற்றும் கழுத்து பகுதியை மசாஜ் செய்தால் போதும். அதனுடன் கொஞ்சம் ஐஸ் பேக் ஒத்தடம் கொடுத்தால் நல்ல ரிலீவ் தசைகளில் உண்டாகும்.
பட்டர்பர் மூலிகை;
ஒற்றைத் தலைவலிக்கு பட்டர்பர் மூலிகை ரெம்ப காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள் ஒற்றைத் தலைவலியை சீக்கிரமாக குணமாக்ி விடுகின்றனர்.
பீவர்வ்யூ மூலிகை;
இந்த மூலிகை ஒற்றைத் தலைவலி வருவதை தடுக்கிறது. நிறைய மக்கள் இந்த மூலிகையை பயன்படுத்தி ஒற்றைத் தலைவலி குணமாகி உள்ளதாக கூறுகின்றனர்.
குளூட்டன் ப்ரீ டயட் (கோதுமை இல்லாத உணவுப் பழக்கம்;
சில ஆராய்ச்சிகளின் முடிவு குளூட்டன் ப்ரீ டயட் மேற்கொண்டால் ஒற்றைத் தலைவலி குறைகிறது என்று கூறுகின்றனர்.
லாவண்டர் எண்ணெய்;
லாவண்டர் எண்ணெய்யை நெற்றியின் இரு பக்கங்களிலும் மற்றும் கழுத்தின் பின் பகுதியிலும் தேய்த்து மசாஜ் செய்தால் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தலாம்.
நீர்ச்சத்து போதுமான;
நீர்ச்சத்து உடலில் இல்லாமல் இருந்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படும். எனவே நிறைய தண்ணீர் குடித்தால் உடலின் மெட்டா பாலிசம் அதிகரித்து ஒற்றைத் தலைவலி சரியாகும்.
நச்சுக்களை வெளியேற்றும் குளியல்;
ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த நச்சுக்களை வெளியேற்றும் குளியலை மேற்கொள்ளவது நல்லது. இந்த குளியலை நிறைய வழிகளில் செய்யலாம். சூடான நீருடன் ஆப்பிள் சிடார் வினிகர் கலந்து குளிக்கலாம். மேலும் நமக்கு தேவையான எண்ணெய்களையும் கலந்து கொள்ளலாம்.
அக்குபஞ்சர்;
ஒற்றைத் தலைவலிக்கு அக்குபஞ்சர் முறை நல்ல தீர்வை அளிக்கிறது. இது உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
யோகா;
யோகா ஒரு பக்க விளைவுகள் இல்லாத முறையாகும். சில யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி சரியாகும்.
உடற்பயிற்சி;
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் ஒற்றைத் தலைவியின் வீரியம் குறைகிறது. உடற்பயிற்சி செய்யும் போது நமது உடல் எண்டோர்பின்ஸ்யை உருவாக்குவதால் இது ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்பட்டு வலியை குறைக்கிறது.
ஆதாரம் – ஒன்இந்திய நாளிதழ்

உடல் சுட்டை குறைக்க வீட்டு வைத்தியம்.

*மாதுளம் பழத்தோலைக் காய வைத்துப் பொடி செய்து… ஒரு டேபிள்ஸ்பூன் பொடிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைத்து குடித்தாலும் சூடு தணியும். சூடு உடம்புக்காரர்கள், அடிக்கடி இளநீர் குடிக்கலாம்.
* மோரில் எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்து அதில் சிறிது ராக் சால்ட் (கடைகளில் கிடைக்கும்) கலந்து வெயில் காலங்களில் குடித்து வர உடல் சூடு தணியும். இது பித்தத்தையும் தணிக்கும்.

கொத்தமல்லி பயன்கள்.

கொத்தமல்லி:  
இதை தினமும்உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல மருந்து ஆகும். பசியை தூண்டும், பித்தம்  குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

உடல் எடையை.குறைக்க எளிய வழி

கேக்,கொழுப்பு நிறைந்த மாமிசம்,பால்,கிரீம்,சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு,மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.

உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி,உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால்,அது உடல் பலவீனத்தையும்,நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.

சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!

உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்

உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை, என்ற பெருவாரியாகப் பரவும் நோய், இன்றைய உலகில் வேகமாக பரவி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இன்றைய வாழ்க்கை முறையின் அங்கமாக திகழும் துரித உணவு, சோடா, மன அழுத்தம் இந்திய மக்களையும் கவ்வ ஆரம்பித்து விட்டது. இதன் விளைவு, மூன்றில் ஒரு இந்தியன் கூடுதல் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்கிறது கணக்கு. இந்த நோயினால் இதய நோய்கள், வாத நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் கூட தாக்க வாய்ப்புள்ளது.

இந்த நோய் குணமாக மருத்துவ துறையின் மேல் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பது இனியும் நல்லதல்ல என்று அறிவுரைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் விரைவில் குணமாகக்கூடியது அல்ல என்பதற்கு உதாரணம், மார்கெட்டில் கிடைக்கும் ஏராளமான பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், அதுவும் வித விதமாக. ஆனால் ஒரு சில இயற்கை வழியில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, அந்த உயர் இரத்த அழுத்த நோயை குணப்படுத்த முடியும். அவை என்னவென்று இங்கே காணலாமா?


பூண்டு
இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.



கற்பூரவள்ளி
ஆய்வு அறிக்கையின்படி, கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.



முருங்கைக் காய்
முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.




நெல்லிக்காய்
நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.



முள்ளங்கி
இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.



எள்
சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.



ஆளி விதை
ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.



ஏலக்காய்
உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.



வெங்காயம்
வெங்காயத்தில் குவர்செட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால், அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் மற்றும் வாதத்திலிருந்து காப்பாற்றும்.


லவங்கப்பட்டை
லவங்கப்பட்டை இதய நோய்கள் தவிர சர்க்கரை நோயையும் தடுக்கும். ஓஹியோவிலுள்ள செயல்முறை உடல் நலம் அறிவியல் மையம் நடத்திய ஆய்வின்படி, 22 நபர்களில் 11 பேருக்கு தினமும் தண்ணீரில் லவங்கப்பட்டை பொடி 250 மி.கி. அளவில் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆறுதல் மருந்து மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் லவங்கப்பட்டை கலந்த தண்ணீர் அருந்தியவர்களுக்கு 13 முதல் 23 விழுக்காடு வரை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு கூடியது. மேலும் உயர் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.