Sunday, 11 March 2018

இயற்கை உரம் ஆட்டு எரு

நம் கண் முன்னால் இருக்கும் இயற்கை உரம்...!
மகசூலை அதிகரிக்க ஆட்டு எரு...!

 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்கும் சுழ்நிலையில் நாம் உள்ளோம். உணவு உற்பத்தியை அதிகரிக்க இயற்கை தந்த ஓர் வரப்பிரசாதம் தான் ஆட்டு எரு. இவ்வகை இயற்கை உரத்தில், செயற்கை உரத்தை காட்டிலும் அதிக சத்துக்கள் உள்ளன. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

எரு அளவு :

ஆட்டு எருவில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து உள்ளது. ஒரு ஆடு ஆண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவை அளிக்கிறது. ஒரு ஹெக்டர் நிலத்தை எல்லா சத்துக்களையும் கொண்டு வளப்படுத்த 240 ஆடுகளின் எரு போதுமானது. 

ஆட்டு எரு மண் வளத்தை பெருக்குகிறது. ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப்பொருட்களின் அளவு அதிகரித்து ஈரப்பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாக இருக்கும். ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவானது, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு கொடுக்கப்படும் தீவனத்தை பொறுத்தே அமைகின்றன.

சத்துக்கள் :

ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான வேலி மசால், சுபா புல், குதிரை மசால், முயல் மசால், தட்டைப்பயறு போன்றவற்றை உணவாக கொடுத்தால், அதன் எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு நுண்ணு}ட்டச்சத்துக்களும், தாது உப்புகளும் அதிகமாக இருக்கும். 

ஆட்டு எருவில் 50 முதல் 75 சதவீதம் தண்ணீரும், 3 சதவீதம் தழைச்சத்தும், 0.5 சதவீதம் மணிச்சத்தும், 1.8 சதவீதம் சாம்பல் சத்தும் இருக்கின்றன. மேலும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான போரான், மக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் ஆகிய சத்துக்களும் அதிக அளவில் உள்ளன.

ஆழ்கூளம் :

விவசாயத்திற்கு அதிக அளவு ஆட்டு எரு தேவைப்படுமானால், அவற்றை ஆழ்கூளம் முறையில் தயார் செய்யலாம். அதற்கு முதலில் ஆட்டு கொட்டகையின் தரைப்பகுதியில் நிலக்கடலை தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு அகியவற்றை அரை அடி உயரத்தில் ஒரு ஆட்டிற்கு 8 கிலோ என்ற அளவில் பரப்பி விட வேண்டும்.

இவ்வாறு பரப்பி விடுவாதால் ஆட்டு புழுக்கையானது இந்த ஆழ்கூளத்தில் படிந்து விடும். சிறுநீர் ஆழ் கூளத்தினால் உறிஞ்சப்பட்டு, தழைச்சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ்கூளத்தில் உள்ள ஈரத்தன்மையை பொறுத்து 3 மாதங்களில் இருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டு எருவை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

லாபம் :

ஆழ்கூளம் முறையில் 20 ஆடுகளில் இருந்து ஒரு ஆண்டீற்கு 5 டன் தரமான எரு கிடைக்கும். இதில் யு+ரியாவில் உள்ளதைப்போல தழைச்சத்தும், சு+ப்பர் பாஸ்பேட்டில் உள்ளதைப்போல மணிச்சத்தும், பொட்டாஷ்சில் உள்ளதைப் போல சாம்பல் சத்தும் இதில் கிடைக்கும். ஆழ்கூளம் முறையில் பெறப்படும் ஆட்டு எருவை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும் நெல், தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை மற்றும் அனைத்து விதமான பயிர்களுக்கும் ஆட்டு எருவை பயன்படுத்தினால் அதிக மகசு+ல் கிடைக்கும், கூடுதல் லாபமும் பெறலாம்.

நுனி வீட்டுக்கு

நடு மாட்டுக்கு

அடி மண்னுக்கு

...கோ.நம்மாழ்வார்...

No comments:

Post a Comment